மதுரை பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
மதுரை அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி பகுதியில் சொந்தமாக அருணா என்ற பெயரில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக வாங்கி வைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென நிறுவனத்தில் ஒரு பகுதியில் புகை வந்ததுள்ளது. இதையடுத்து பணியிலிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவி குடோன் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.
மதுரை அனுப்பானடி, தல்லாகுளம்,பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து காரணமாக சுமார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசம் ஆனதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
more>>>>> Tamil Latest News | News
Post a Comment