Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்தியாவில் ரேஷன் கார்டுகளின் பயன்பாடு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல கோடி பேர் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த சூழலில் நாடு முழுவதும் 3 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதில், கருவிழி அடையாளம், கைரேகை பதிவு, ஆதார் எண் இணைக்காதது, கிராமப்புற மற்றும் ரிமோட் பகுதிகளில் இணையச் சேவை பாதிப்பு ஆகியவற்றால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு மிகவும் சாதாரணமாக கடந்து செல்ல முயல்கிறது.


இதன்மூலம் ஜார்க்கண்ட், உ.பி, ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பிகார், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்கள் பசியால் வாடி உயிரிழக்கும் சூழல் ஏற்படும். மத்திய அரசின் செயல்பாடு மிகவும் கொடூரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி

எஸ்.ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Tamil Latest News | News

அப்போது, ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது உண்மையெனில் மிகத் தீவிரமான விஷயம் என்று நீதிபதிகள் கூறினர். உடனே மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் உரிய பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, ஆதார் வேலிடிட்டி தொடர்பாக கே புட்டசுவாமி வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பை முறையாக அமல்படுத்தி வருகிறோம்.

Tamil Latest News | News

ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடாக வாங்கப்பட்ட ரேஷன் கார்டுகளைத் தான் ரத்து செய்துள்ளோம். மனுதாரர் தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் 10 முதல் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


More >>>> Tamil Latest News | News

Post a Comment

Previous Post Next Post