Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 மதுரை வாடிப்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், பள்ளிக்கு விடுமுறை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.




மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 23 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த வரலாற்று ஆசிரியர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது. உடனடியாக அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால சக, ஆசிரியர்கள், மாணவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர் உடனே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பள்ளியில் பயிலும் 23, மாணவர்களுக்கும், 34 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை எனப்படும் PCR சோதனை உடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பள்ளிக்கு வருகை தந்து கொரோனா மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். பள்ளிக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் தெரியவரும். அதன் பின்னரே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Post a Comment

Previous Post Next Post