நடிகர்கள்: ராணா,விஷ்ணு விஷால்
இயக்கம்: பிரபு சாலமன்
சினிமா வகை: Drama
கால அளவு: 2 Hrs 30 Min
வீரபாரதி என்கிற காடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணா. ஆற்றங்கரையோரம் காடன் அமைதியாக அமர்ந்திருக்க யானைகள் நீர்குடிப்பதுடன் படம் துவங்குகிறது. காட்டுப் பகுதியை அருமையாக காட்டியுள்ளனர். பார்க்கும்போதே நிம்மதி ஏற்படுகிறது.
இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார் காடன். அவர் காட்டில் வளர்த்து வரும் மரங்களை வெட்டினால் காடன் எப்படி பதிலடி கொடுப்பார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பர் காடுகளில் இருக்கும் மரங்களை ஆள் வைத்து வெட்டுகிறார். அந்த நபர் டெவலப்பர் மட்டும் இல்லை சுற்றுச்சூழல் அமைச்ச,ர் அவருக்கு பெயர் குறிஞ்சிநாதன்(ஆனந்த் மகாதேவன்).
கோல்ஃப், ஆம்பிதியேட்டர் என்று சகல வசதிகள் கொண்ட குடியிருப்பு பகுதியை உருவாக்க விரும்புகிறார் அமைச்சர். ஆனால் அவர் ஆசை நிறைவேறுவதற்கு காடன் மற்றும் யானைகள் தடையாக இருக்கிறார்கள்.
தியேட்டருக்கு வருபவர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளார் காடன். அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு மாதிரியாக இருக்க அதில் வித்தியாசமானவர் மாறன்(விஷ்ணு விஷால்).
தன் கும்கி யானை ஜில்லுவுடன் அமைச்சரின் ஆட்கள் காட்டு யானைகளை அடக்க உதவி செய்ய வருகிறார் மாறன். அவருடன் ஒரு வயதானவரும் வருகிறார்(ரகு பாபு, காமெடி செய்துள்ளார்).
வந்த இடத்தில் மாறனுக்கு அருவி (ஜோயா ஹுசைன்) மீது காதல் ஏற்படுகிறது. தங்களின் உரிமைக்காகவும், காட்டை பாதுகாக்கவும் போராடும் கும்பலை சேர்ந்தவர் அருவி. அருவி மற்றும் காடன் நிலையை பார்த்து பரிதாபப்படும் அருந்ததி(ஸ்ரியா பில்காவ்ன்கர்) கதாபாத்திரத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கதையை அழகாக சொல்கிறார் பிரபு சாலமன். ஆனால் கிளைமாக்ஸில் தான் அறிவுரை வழங்கியிருக்கிறார். தன் அபார நடிப்பால் நம்மை கவர்கிறார் ராணா.
காடன்- நம்பி பார்க்கலாம்
Post a Comment