Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.



தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் செய்முறைத் தேர்வு நடைபெறும் என்றும் தேர்தல் முடிவு மே 2ஆம் தேதி வெளியாகும் நிலையில் மே 3ஆம் தேதி பொதுத் தேர்வு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதால் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி கல்வித்துறைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

*வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட வேண்டும்

*மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

*மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும்


*ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி இருக்க வேண்டும்

*மதிய உணவு சாப்பிடும் போது மாணவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்

*வகுப்பறை ஜன்னல், கதவுகள் கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும்

*ஒவ்வொரு வகுப்பறையிலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும்


என்ற சுற்றறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. இது ஒருபுறமிருக்க பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வையும் ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post