Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 தஞ்சையில் கொரோனா பரவ காரணமாக இருந்த பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




கொரோனா பரவல் காரணமாக மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமோ என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் சில இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தஞ்சை மாவட்ட பள்ளிகளில் மேலும் 29 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளியில் புதிதாக 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை பிருந்தாவனம் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஆசிரியரின் மனைவி தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். பணிக்காக தஞ்சைக்கு சென்று வரும் போது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் கணவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத இரண்டு தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 12,000 ரூபாயும், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post