Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

          



நடிகர்கள்:
சித்தார்த்,நிமிஷா சஜயன்,அஞ்சலி நாயர்
இயக்கம்: சு அருண் குமார்சினிமா வகை:Dramaகால அளவு:2 Hrs 2 Min
ஒரு சிறு ஊரில் தன் அண்ணன், அண்ணி(அஞ்சலி நாயர்), அவர்களின் 8 வயது மகள் சுந்தரி(சஹஸ்ரா ஸ்ரீ )ஆகியோருடன் வசித்து வருகிறார் ஈசு(சித்தார்த்). அண்ணன் மகள் சுந்தரியை சேட்டை என செல்லமாக அழைக்கிறார் ஈசு.

அண்ணன் திடீரென்று இறந்துவிடவே குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார் ஈசு. இந்நிலையில் பள்ளியில் உடன் படித்த சக்தி (நிமிஷா சஜயன்)மீது ஈசுக்கு காதல் ஏற்படுகிறது.

சேட்டை மற்றும் சித்தா இடையேயான உறவை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண் குமார். தன் அண்ணன் மகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் ஈசு. சேட்டை தானாக வீட்டிற்கு சென்றுவிட்டார் என பள்ளி பாதுகாவலர் கூறியதை கேட்டு சித்தா கோபம் அடைவதில் இருந்தே அவர் தன் அண்ணன் மகள் மீது எந்த அளவுக்கு பாசமாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்று நமக்கு புரிகிறது. ஆனாலும் பயத்தை ஓரமாக வைத்துவிட்டு அதுவரை சந்தோஷமாக படம் பார்க்கிறோம். எல்லாம் நன்றாக செல்லும்போது சேட்டை காணாமல் போகிறார். தன் அண்ணன் மகள் சேட்டையை கண்டுபிடிக்கிறாரா சித்தார்த் என்பதே கதை.

சந்தோஷமாக சென்ற படம் திடீரென்று திசை மாறி சீரியஸாகிறது. அய்யோ கெட்டது நடந்துவிடக் கூடது என்று நினைக்கும்போதே எதிர்பாராத அளவுக்கு நடக்கிறது. அதை பார்க்க விரும்பாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதை காணும் ஆவல் ஏற்படுகிறது.

அதனால் இருக்கையை விட்டு நகர மனமில்லை. தொடர்ந்து பாலியல் பலாத்காரம், கொலை செய்யும் நபரின் கையில் சிறுமி சேட்டை சிக்குவதை பார்க்க கடினமாக இருக்கிறது. படத்தில் அந்த கொடூரங்களை அப்படியே காட்டாவிட்டாலும் பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது.


நடக்கக் கூடாது என நினைத்த விஷயம் நடந்த பிறகு வரும் காட்சிகளால் பரபரப்பு ஏற்படுகிறது. படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். சித்தார்த்தின் நடிப்பு தனித்து தெரிகிறது. முதல் தமிழ் படத்திலேயே நம்மை கவர்கிறார் நிமிஷா சஜயன். இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சஹஸ்ரா ஸ்ரீயின் நடிப்பு அருமை.

Post a Comment

Previous Post Next Post