Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 

                






நடிகர்கள்:
ஜெயம் ரவி,நயன்தாரா,நரேன்,ராகல் போஸ்
இயக்கம்: அகமதுசினிமா வகை:Psychological, Thriller, Crimeகால அளவு:2 Hrs 33 Min

படம் துவங்கியதும் நீதிக்காக உழைக்கும் பயமில்லாத போலீஸ் அதிகாரியான அர்ஜுனை(ஜெயம் ரவி) அறிமுகம் செய்து வைக்கிறார்கள். தன் வேலைக்கே பிரச்சனை வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குற்றவாளிகளை எதிர்கொள்பவர் அர்ஜுன். அவரின் நெருங்கிய நண்பர் ஆண்ட்ரூ(நரேன்).


உன் கோபத்தை குறைத்துக்கொள் என அர்ஜுனிடம் கூறி வருகிறார். குற்றவாளிகளை அர்ஜுன் கையாளும் விதத்தால் தங்கள் இருவருக்கும் பிரச்சனை வருமோ என நினைக்கிறார் நண்பரும், சக காவலருமான ஆண்ட்ரூ. தன் மனைவி ஜாஸ்மின்(விஜயலட்சுமி), தங்கை ப்ரியா (நயன்தாரா) மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆண்ட்ரூ.

சைக்கோ கொலையாளியான பிரம்மா(ராகுல் போஸ்) இரவில் சிறுமிகளை கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்வதால் அர்ஜுன், ஆண்ட்ரூவின் வாழ்க்கை மாறுகிறது. பிரம்மாவால் கொலை செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்ட்ரூ மற்றும் அவரின் குழுவினர் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து, கைது செய்கிறார்கள். அப்பொழுது ஆண்ட்ரூ இறந்துவிடுகிறார்.

தன் ஆரூயிர் நண்பன் ஆண்ட்ரூவின் மரணத்தால் வேதனை அடைகிறார் அர்ஜுன். இதையடுத்து காவல் துறையை விட்டு விலகி ஆண்ட்ரூவின் குடும்பத்தை காப்பாற்றுகிறார். ஆண்ட்ரூவின் தங்கையுடன் சேர்ந்து காபி கடையை திறக்கிறார். அப்படி செய்தால் வாழ்க்கை அமைதியாக செல்லும் என நினைக்கிறார். ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து பிரம்மா தப்பியோடி மீண்டும் கொலை செய்யத் துவங்குவதால் அர்ஜுனின் நிம்மதியான வாழ்க்கையில் புயல் வீசுகிறது.

பிரம்மாவை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பாரா அர்ஜுன்?

பிரம்மாவை அறிமுகம் செய்து வைக்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் பாதியில் இருக்கையின் நுனிக்கு நம்மை வரவைக்கிறார் இயக்குநர். திரைக்கதை நம்மை கவர்கிறது. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். வழக்கமாக கிளைமாக்ஸில் நடப்பது ஆரம்பத்திலேயே நடக்கிறதே என சந்தோஷப்படுகிறோம்.


கொலையாளியை தான் கைது செய்துவிட்டார்களே அடுத்த இரண்டு மணிநேரம் என்ன செய்வார்கள் என்கிற ஆவல் எழுகிறது. ஆனால் இடைவேளையின்போது படத்தின் மீதான ஆவல் குறைகிறது.

இரண்டாம் பாதி அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை. அடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. நமக்கு தெரிந்த தகவல்களை இயக்குநர் தெரிவிப்பதால் சுவாரஸ்யம் குறைகிறது. இன்னொரு கதாபாத்திரத்தை கொண்டு வராமல் ராகுல் போஸ் மட்டும் ஒரே சைக்கோவாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.

எல்லா இழப்புகளும் ஹீரோவுக்கு ஏற்படுவது படத்திற்கு கை கொடுக்கவில்லை. படத்தை தன் அபார நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த கதாபாத்திரமாக மாறி நம்மை அவருக்காக பாவப்பட வைத்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

நல்ல சைக்கோ த்ரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறது இறைவன். ஆனால் சில இடங்களில் திரைக்கதை வலுவில்லாமல் போக சுமார் ரகமாக்கிவிட்டது.

Post a Comment

Previous Post Next Post