Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 ஆதார் - பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அடுத்து ஜூன் 30தான் கடைசித் தேதி. அதற்குள் இணைத்தால் தப்பிக்கலாம்...



தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆதார் - பான் இணைப்புக்கான நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக சென்ற ஆண்டின் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் 31, இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் சூழலில் இன்னும் பலர் ஆதாரை பான் கார்டுடன் இணைக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்று கடைசி நாளில் நிறையப் பேர் ஆன்லைன் மூலமாக ஆதார் - பான் இணைப்புக்கு முயற்சித்ததால் செர்வர் பிரச்சினை ஏற்பட்டது. பலரால் இன்று இணைக்க முடியாமல் போனது. கடந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த முறையும் கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த வேண்டும். எனவே இன்றைய அறிவிப்பு இன்னும் இணைக்காமல் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post