Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு பெங்களூரு நகருக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு அமலாக உள்ளது.



கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோவிட்-19 பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் முக்கிய காரணமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பெங்களூரு நகருக்குள் சாலை, ரயில், விமானம் என எந்தவொரு போக்குவரத்தின் மூலம் வருகை தந்தாலும் RT-PCR நெகடிவ் சான்று கட்டாயம் வேண்டும். அதைக் காண்பித்த பிறகே பெங்களூருவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கோவிட்-19 பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. இவற்றில் 60 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்களால் ஏற்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் RT-PCR நெகடிவ் சான்று கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இது தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பெங்களூரு நகருக்கு செல்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறினார்.

ஆனால் வெளிமாநிலங்கள், நகரங்களில் இருந்து வருவோரிடம் கொரோனா நெகடிவ் சான்று எவ்வாறு பரிசோதிக்கப்படும் என்ற விரிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களைச் சேர்ந்த பலர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில் பெங்களூரு திரும்ப கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் தேவை என்று கூறப்பட்டிருப்பது, வாக்களிக்க செல்பவர்களை தயக்கமடையச் செய்துள்ளது. தங்களது பயணத் திட்டங்களை பலர் ரத்து செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post