Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 டீசல் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.



பெட்ரோல், டீசல் விலை ஒரு பக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே டீசலை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக பரிதாபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டீசல் டோர் டெலிவரி திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக, டெலிவரி நிறுவனமான ஹும்சபாருடன் (Humsafar) பாரத் பெட்ரோலியம் கூட்டணி அமைத்துள்ளது.

தொழில்துறை வாடிக்கையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு டீசல் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. பரிதாபாத்தில் டிகோன், பல்லப்கர், பிரித்லா, பரிதாபாத் NIT, பத்கல், பதர்பூர் ஆகிய பகுதிகளில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் தங்கியிருக்கும் மக்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், போக்குவரத்து நிறுவனங்கள், கட்டுமான பணிகள், விவசாயிகள், கனரக வாகனங்கள், மொபைல் டவர்கள், கல்வி நிறுவனங்கள், சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் ஆகியோருக்கு டீசல் டோர் டெலிவரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Fuelkart அல்லது Humsafar ஆப்களில் டீசல் பெற புக்கிங் செய்யலாம். கொடுக்கப்பட்ட இடத்துக்கு நேரடியாகவே டீசல் டெலிவர் செய்யப்படும். தற்போது பரிதாபாத்தில் அமலில் இருக்கும் டீசல் டெலிவரி திட்டம் படிப்படியாக மற்ற ஊர்களுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post