Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.



தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஆரம்பித்துவிட்டதோ என்று கூறும் அளவுக்கு பாதிப்புகள் பல இடங்களில் அதிகரித்து வருகின்றன.

 மும்பை, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதமர் நரேந்திரமோடியும் இது குறித்து மத்திய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டுள்ளார்.


இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.


தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களிடமும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post