Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 வன்னியர் இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்த கருத்து பாமக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வந்த வேளையில் வன்னியருக்கு 20% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென
பாமக தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர், வன்னியர் சமூகத்துக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டது தமிழக அரசு.

தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியாக இருக்கிறது வன்னியர் சமூகம். வட தமிழகத்தில் உள் இடஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அதிமுகவினரும், பாமகவினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம், மற்ற சமூகத்தினர் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, தேவர் சமூக மக்கள் அதிமுக மீது கடுப்பில் இருப்பதாக தென்னக வட்டாரங்கள் கூறுகின்றன.

தேவர் சமூகங்களை சேர்ந்த அமைச்சர்களே இதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறுகின்றனர். நிலைமை இப்படியிருக்க, மதுரை திருமங்கல் அருகே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தபோது, “சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த 20% வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பலர் பேசி வருகின்றனர்.

அந்த இடஒதுக்கீடு தற்காலிகமானதுதான். இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. எனவே, ஆறு மாத காலத்துக்கு மட்டும் தற்காலிக மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு ஆறு மாத காலம் மட்டுமே செயல்படும்” என்று கூறினார்.

இந்த தகவல் ராமதாஸ் மட்டுமல்லாமல் பாமகவினர் தலையில் இடி விழுந்தது போல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர். மேலும், வெறும் 6 மாத இடஒதுக்கீட்டுக்காகவா இத்தனை நாள் போராடினோம் என பாமகவினர் கடுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post